சுமார் 70 வயதுடைய ஒருவர், தன் மனைவியுடன் ஜீவநாடியில் பலனறிய வந்திருந்தார். 

Advertisment

"ஐயா, எங்கள் வருங்கால வாழ்க்கையின் நிலை பற்றி அறிந்து கொள்ள அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். நானும் அவரிடம் மேலும் எதுவும் கேட்காமல், ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

Advertisment

இந்த தம்பதியினருக்கு, திருமணமாகி நீண்டகாலம் குழந்தை பாக்கியம் இல்லை.  ஒன்பது வருடங்கள் சென்றபின்பு, ஒரு மகன் பிறந்தான். அதற்குப்பிறகு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. தவமாய்த் தவமிருந்து பெற்ற ஒரே மகன் என்பதால் இப்பிறவி வாழ்க்கையே தன் மகனுக்காகத்தான். மகன் வாழ்வில் அவன் எந்த சிரமமும், கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்து, தங்கள் ஆசை, விருப்பம், சுகங்களை துறந்து, கடுமையாகப் பாடுபட்டு,  பணம் சம்பாதித்து, பணம்,  பொருள், சொத்துகளைச்  சேர்த்தான்.

மகனை நல்ல பள்ளியில் படிக்க வைத்தான். அவனும் நன்கு படித்து பட்டம் பெற்றான். ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேளையில் சேர்ந்தான். தன்னுடன் பணிபுரிந்த வேறு மாநிலப் பெண்ணை விரும்பி, அவளையே திருமணம் செய்து கொள்கின்றேன் என்று மகன் கூறியதைக்கேட்ட இவர்களும், அவனின் விருப்பப்படியே மகன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்தனர். 

Advertisment

இரண்டு வருடங்கள், ஒரே வீட்டில் மகன் மருமகளிடம் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இவர்கள் மகனுக்கு ஒரு மகன் பிறந்தான். பேரன் பிறந்து வம்சம் விருத்தி அடைந்தது என்று மகிழ்ந்தார்கள்.

இவன் பெற்ற மகனுக்கு, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது, அவனும் குடும்ப பொறுப்புள்ளவனாகி விட்டான்.  நமக்கும் வயதாகிக் கொண்டேவருகின்றது.  மகனின் நல்வாழ்விற்காக, நாம் சம்பாதித்து வைத்துள்ள வீடு, சொத்துகளை அவன் பெயருக்கே மாற்றி எழுதி வைத்துவிடலாம், நமது ஆயுள் இறுதிவரை மகன் நம் இருவரையும், கண் கலங்காமல் காப்பாற்றுவான் என்று கணவன்- மனைவி இருவரும் கலந்துபேசி மகன்மீது இருந்த நம்பிக்கையால் சொத்துகளை அவன் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துவிட்டான்.

இவன் மகனின் உத்தியோகம் வெளிமாநிலத்திற்கு  மாறி கடந்த இரண்டு வருடங்களாக அங்கு பணிபுரிந்து வருகின் றான்.  இப்போது இங்குள்ள சொத்துகளை விற்றுவிட்டு தான் பணிபுரியும் மாநிலத்திலேயே குடும்பத்துடன் வாழ முடிவுசெய்தான். அவன் மனைவியும், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவள்தான். மகன் தன் முடிவை கூறினான். இவன் அவ்வாறு செய்யாதே. சொத்துகளை விற்காதே, எல்லோரும் ஒன்றாக இங்கேயே இருப்போம் என்று எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் மகன் இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.  உன் விருப்பம் அது தான் என்றால், சொத்துகளை விற்றுவிடு. நாங்களும் உன்னுடன் அங்கேயே வந்து விடுகின்றோம், 

ஒன்றாக வசிக்கலாம் என்று மகனிடம் கூறினான்.

எங்கள் வாழ்வில் இதுவரை நடந்ததும், இப்போது நடந்து கொண்டு இருப்பதும், நான் அனுபவிப்பது, அனைத்தும் அகத்தியர் கூறிய உண்மைதான். எங்கள் எதிர்கால வாழ்க்கை இப்போது இருளாகத் தெரிகின்றது. இனி நாங்கள் என்ன? முடிவெடுப்பது, எப்படி வாழ்வது? என்று அகத்தியர்தான் வழி காட்ட வேண்டும்.

இவனின் இந்த வாழ்க்கை நிலைக்கு காரணம் கூறுகின்றேன், அறிந்து கொள்ளட்டும். இவன் வம்சத்தில் இவன் தகப்பன் பாட்டனுக்கு, அவன் மகனான இவன் பாட்டன் செய்த பாவம், அதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆத்மா விட்ட சாபம், இப்போது இவன் வாழ்க்கையில் பாதிப்பைத் தருகின்றது.  பெற்ற மகன்மூலம் அனுபவிக்கச் செய்கின்றது.

நான்கு தலைமுறைக்குமுன்பு முன்னோர் விட்ட சாபம் இவன் வரை தொடர்ந்து வந்து பாதிப்பைத் தந்து கொண்டிருக்கின்றது.  இவன் வம்சம் பெற்ற தந்தைக்கு சோறுபோட்டு காப்பாற் றாத வம்சம். திருமணம் முடிந்து, ஒரு மகன் பிறந்துவிட்டால் சாபம் செயல்பட்டு தாய்- தந்தையை பிரித்துவிடும். மகன் சம்பாதித்து பெற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்பது விதியென்று புரிந்து கொள்ள சொல்.

இவன் பூர்வீக கிராமத்தில் முன்னோர்கள் தேடிவைத்த விவசாய நிலம் கொஞ்சம் உள்ளது. இவன் மகன் இவனை தன்னுடன் அழைத்துச் செல்லமாட்டான். இவன் தன் முன்னோர் வசித்த சொந்த ஊருக்கு சென்று அந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரச்சொல். மகனை எதிர்பார்த்து வாழவேண்டாம் என்று கூறி விட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் காப்பாற்றுவார்கள் என்று எண்ணாமல் பிள்ளைகளையும் வாழவைத்து, வயது முதிர்ந்த காலத்தில் தாங்களும் நிம்மதியாக வாழ கையில் ஏதாவது பணம் சொத்துகளை சேமித்து காப்பாற்றி வைத்துக் கொள்ளவேண்டும்.  ஒரு மனிதன் பெற்ற தந்தையையும் நம்பி வாழக்கூடாது, தான் பெற்ற பிள்ளைகளையும் நம்பி வாழக்கூடாது.  தன் வாழ்வை தானே காப்பாற்றிக்கொண்டு வாழவேண்டும் என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

செல்: 99441 13267